தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமையான இன்று பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 62,938 பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். 30,751 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.24 கோடி காணிக்கை செலுத்தினர்.

சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 18 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை