சபரிமலை,
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக ஆன்லைனில் முன் பதிவு செய்யாத பக்தர்களும் ஏராளமானோர் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நிலக்கல்லில் பக்தர்களின் முன்பதிவு ஆவணங்களை சரிபார்க்கும் போலீசார், முன்பதிவு டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
இதனால் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தேவசம் போர்டு தலைவர் வாசு கேட்டுக்கொண்டுள்ளார்.