மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மும்பை தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாரவியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மராட்டிய தலைநகர் மும்பையில் நேற்று சோதனை செய்யப்பட்ட 32 ஆயிரத்து 711 பேரில் 746 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 13 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரத்து 356 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15 ஆயிரத்து 396 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 96 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 728 நாட்களாக உள்ளது.