கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சமூக வலைத்தளங்களையும் விட்டுவைக்காத மத்திய அரசாங்கம்..! காங்கிரஸ் குற்றச்சாட்டு

ராகுல்காந்தியின் வீச்சை கட்டுப்படுத்த, சமூக வலைத்தளங்களை கூட மத்திய அரசாங்கம் விட்டுவைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மாதம் டுவிட்டர் நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மாதந்தோறும் தன்னை புதிதாக பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சரிந்து வருவதாகவும், இதை ஆய்வு செய்யுமாறும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டேவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், சமூக வலைத்தளங்கள், மக்கள் தொடர்புக்கான மாற்று வழிகள் என்பதால், அவற்றை வலுக்கட்டாயமாக நசுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. காங்கிரஸ் தலைவர்களின், குறிப்பாக ராகுல்காந்தியின் வீச்சை கட்டுப்படுத்துவதற்காக கணக்குகளை தன்னிச்சையாக முடக்கவும், நிறுத்தி வைக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதை அதிருப்தியை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கிறோம். பேச்சு சுதந்திரத்தை முடக்கினால், அதற்கு சமூக வலைத்தளங்கள் பொறுப்பேற்க செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்