புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நேரில் செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஆனால், வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கோ அல்லது அதன் அண்டை கிராமமான சீதாபூருக்கோ ராகுல் காந்தி செல்ல உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில், லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது:-
''நாட்டின் விவசாயிகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. முன்பு ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்த இந்தியாவில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அரசியல்வாதிகள் உத்தரபிரதேசத்திற்கு செல்ல முடியவில்லை. நாங்கள் உத்தரபிரதேசத்திற்கு செல்லமுடியாது என்று நேற்று முதல் எங்களிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்றார்.