தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

தினத்தந்தி

டெல்லி,

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். முதன் முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதார பணியாளர் மணீஷ் குமாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், இன்று தான் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்திருப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி பயனளிக்கும் என்றும் தெரிவித்தார். டெல்லியில் 75 மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்