மால்கன்கிரி,
ஒடிசாவின் மால்கன்கிரி மாவட்டத்தில் மண்டப்பள்ளி பகுதியில், எல்லை பாதுகாப்பு படை போலீசார் (பி.எஸ்.எப்.) நடத்திய சோதனையில் சக்தி வாய்ந்த 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து அவற்றை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்ற போலீசார் அதன்பின் 3 வெடிகுண்டுகளையும் செயலிழக்க செய்தனர். இதனால் பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
இந்த வெடிகுண்டுகளை மாவோயிஸ்டு அமைப்பினர் வைத்திருக்க வேண்டும் என பி.எஸ்.எப். வீரர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.