படம்: PTI 
தேசிய செய்திகள்

பட்ஜெட்டில் கல்வி, திறன், ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு 2-வது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது -பிரதமர் மோடி

கல்வித்துறைக்கான இந்த ஆண்டு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி வெபினாரில் உரையாற்றினார்.

தினத்தந்தி

புதுடெல்லி

கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து வெபினாரில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-

2021 பட்ஜெட்டில் கல்வி, திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகியவற்றில் இரண்டாவது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. ஆத்மனிர்பர் பாரத்" கட்டமைக்க, இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை இருப்பது முக்கியம். இளைஞர்களுக்கு அவர்களின் கல்வி, திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கும்போது தன்னம்பிக்கை வருகிறது.

திறமை வெளிப்படுவதற்கு மொழி ஒரு தடையாக மாறக்கூடாது.நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் திறமைகள் உள்ளன. புதிய தேசிய கல்வி கொள்கையில், இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் உலகின் சிறந்த உள்ளடக்கம் எவ்வாறு கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மொழியின் நிபுணர்களின் பொறுப்பாகும்.

இந்தியா ஹைட்ரஜன் வாகனத்தை சோதனை செய்துள்ளது. இப்போது நாம் ஹைட்ரஜனை போக்குவரத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோம். எதிர்கால எரிபொருள், பசுமை ஆற்றல் 'ஆற்றல்' தன்னிறைவு அடைய இது மிகவும் முக்கியம்.

கல்வியை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திறனுடன் இணைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை பட்ஜெட் விரிவுபடுத்தியுள்ளது என கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை