தேசிய செய்திகள்

டெல்லியில் அவலம்; ரெயில்வே பாலம் கீழ் செல்ஃபி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

டெல்லியில் ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கி இருந்த மழைநீரில் செல்ஃபி, வீடியோ எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த அவலம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது.

இதனால், வாகன போக்குவரத்து பாதிப்படைந்தது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட சூழலில் கனமழையால் வாகனங்கள் ஊர்ந்து சென்று போக்குவரத்தில் நெருக்கடி நிலை காணப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் பூல் பிரகலாத் பூர் பகுதியில் ரெயில்வே சுரங்க பாதையில் தேங்கியிருந்த மழைநீரை தனது போனில் 27 வயது வாலிபர் ஒருவர் செல்ஃபி எடுத்துள்ளார். பின்பு வீடியோவும் எடுத்து கொண்டு இருந்துள்ளார்.

இதில் திடீரென அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி அவரது சகோதரி கூறும்போது, எனது சகோதரன் உயிரிழந்து விட்டான் என தொலைபேசி வழியே தெரிவித்தனர். உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றேன். இறுதியாக அவனை பார்க்க கூட என்னிடம் திராணியில்லை என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்