தேசிய செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரு:-

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் நிலையத்தில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ராமகிருஷ்ணா என்பவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லோக் அயுக்தா போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு, ராமகிருஷ்ணாவுக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தது.

அதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ராமகிருஷ்ணா மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நீதிபதி நடராஜன் இருதரப்பு வாதங்களையும் விசாரித்தார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், அவர் சொத்துக்களை சட்டவிரோதமாக வாங்கி சேர்த்ததற்கான ஆதாரம் இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணாவை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்