புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி முதல், 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்துக்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 54.04 கோடி தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.
இவற்றில் 52 கோடியே 96 ஆயிரத்து 418 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. 2 கோடியே 55 லட்சத்து 54 ஆயிரத்து 533 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும், தனியார் ஆஸ்பத்திரிகளிடமும் கையிருப்பாக உள்ளன.
இந்த நிலையில் மேலும் 1 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 510 தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.