புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரையில் மத்திய அரசு சார்பில் 100 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இதில் பயன்படுத்தியதுபோக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் கையிருப்பாக 10 கோடியே 53 லட்சத்து 11 ஆயிரத்து 155 டோஸ்கள் இருக்கின்றன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.