கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கவர்னர் ஜகதீப் தன்கருக்கும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும், கவர்னர் ஜகதீப் தன்கருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
தனது ஒப்புதலின்றி மாநில அரசு துணைவேந்தர்களை நியமிப்பதாக கவர்னர் குற்றம் சாட்டி வருகிறார். மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின் போதும் மம்தாவை மிகக்கடுமையாக கவர்னர் ஜகதீப் தன்கர் தன்கர் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், கவர்னர் ஜகதீப் தன்கர் தன்கரின் டுவிட்டர் கணக்கை மம்தா பானர்ஜி பிளாக் செய்துள்ளார். கவர்னரின் டுவிட்கள் தனது அமைதியை குலைப்பதாக இருப்பதாகவும் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். இந்த விவகாரம் தற்போது மேற்கு வங்க அரசியலில் மட்டும் இல்லாமல் டெல்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.