தேசிய செய்திகள்

அம்பை மாற்றிப் பிடித்த பிரதமர் மோடியை கலாய்த்த நடிகை திவ்யா ஸ்பந்தனா

பிரசார கூட்டத்தில் பிரதமர் அம்பை மாற்றிப் பிடித்ததை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா கலாய்த்துள்ளார்.

தினத்தந்தி

பிரதமர் மோடி ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசாரம் செய்த போது வில்-அம்பு பரிசாக வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி பரிசை வைத்துக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் போது வில்லை மாற்றிப் பிடித்திருந்தார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களுடன் இந்த புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவும் கலாய்த்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் திவ்யா வெளியிட்டுள்ள செய்தியில், அங்கிள், எது முக்கியமானது என்பதில் கவனம் செலுத்துங்கள். சிறிது நேரமாவது கேமராவைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பாருங்கள். கேமரா உங்களுடைய நண்பன் கிடையாது. கேமராவுடனான உறவை முறித்து கொள்ளுங்கள். கடவுள் ராமரும் சந்தோஷமாக இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்