தேசிய செய்திகள்

தீபாவளி ராக்கெட்டால் ஏற்பட்ட விபரீதம்: கண்பார்வையை இழந்த மாணவி

தீபாவளி ராக்கெட் கல்லூரி மாணவியின் கண்ணில் பட்டதையடுத்து அவர் கண்பார்வை பறிபோகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள குருநானக் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் ஸ்வப்னா. கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியிலேயே அவர் தங்கியுள்ளார், அதன் அருகிலேயே ஆண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆண்கள் விடுதியில் உள்ள மாணவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர்.

அப்போது சில மாணவர்கள் சேர்ந்து ராக்கெட் பட்டாசு வெடித்துள்ளனர். அதில் ஒரு ராக்கெட் நேராக பெண்கள் விடுதியில் இருந்த ஸ்வப்னாவை நோக்கி சென்று அவர் கண்களை தாக்கியுள்ளது. இதையடுத்து வலியால் துடித்த ஸ்வப்னாவை விடுதி காப்பாளர் தூக்கி சென்று அருகிலிருந்த தனியார் கண் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக ஸ்வப்னாவின் கண் பார்வை பறிபோகியுள்ள நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது