தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு ஆகியவைகளை பின்பற்றாமல் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டிய திமுக, தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கூறியிருந்தது.

இதன்படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை எனவும் 1991-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்