தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோர் இன்று சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்பின் போது, காவிரி, மேகதாது விவகாரங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது.

பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக எம்.பி டி ஆர் பாலு, மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினோம்.

தமிழகத்திற்கு பாதகமாக எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காது என பிரதமர் உறுதியளித்தார். மேகதாது அணையை கட்டக்கூடாது என பழனிசாமி இதுவரை வலியுறுத்தவில்லை என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு