தேசிய செய்திகள்

விதவைகள் நலத்திட்டங்களில் அக்கறை செலுத்தாத 8 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம்

உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவன் நகரில் உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லங்களில் நலத்திட்டங்களை சரிவர செயல்படுத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது பிரச்சினைகளை கையாளுவதற்காக மத்திய அரசு நிபுணர் குழுவை அமைக்க பரிந்துரை செய்துள்ளது. எனினும் பல மாநில அரசுகள் இதை பின்பற்றவில்லை. அந்த அரசுகள் பெண்கள் நலனில் எந்த அக்கறையும் செலுத்தவில்லை என்று கண்டித்தனர்.

மேலும் மத்திய அரசின் பரிந்துரைகளை செயல்படுத்தாத ஆந்திரா, காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் தலா ரூ.50 ஆயிரமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு அரைகுறையாக தகவல் தெரிவித்த மராட்டியம், மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் அபராதம் விதித்து, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 31ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை