தேசிய செய்திகள்

ஆக்சிஜன் செறிவூட்டிகள் சுங்கத்துறை ஒப்புதலுக்காக காத்திருப்பா? - மத்திய அரசு மறுப்பு

வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுங்கத்துறை ஒப்புதலுக்காக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுவதை மத்திய அரசு மறுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் ஆக்சிஜன் தேவைக்கான தளவாடங்களை மனிதாபினமான அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கி வருகின்றன.

அந்தவகையில், சீனா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 3 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

அந்த செறிவூட்டிகள், சுங்கத்துறை ஒப்புதலுக்காக அத்துறையின் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.

இந்தநிலையில், இதை மத்திய அரசு நேற்று மறுத்தது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தகவல் முற்றிலும் தவறானது. எந்த உண்மையோ, அடிப்படையோ இன்றி வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து வந்த 3 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும் இத்தகவலை மறுத்துள்ளது. சுங்க இலாகா உடனுக்குடன் இறக்குமதி பொருட்களை கையாண்டு அனுப்பி விடுவதாகவும், எந்த பொருட்களும் சுங்க இலாகாவிடம் நிலுவையில் இல்ல என்றும் கூறியுள்ளது.

அத்துடன், மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே இந்த தகவலை மறுத்திருந்தது. சமீபத்தில் டெல்லி ஐகோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீலும் மறுப்பு தெரிவித்தா.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்