தேசிய செய்திகள்

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மருத்துவ கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனை குழு அமைக்கப்படும்.

மக்களவையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்