தேசிய செய்திகள்

காஷ்மீர் தொடர்பாக மோடி அரசுக்கு தெளிவான கொள்கை இல்லையா? - ராகுல்காந்தி

காஷ்மீர் தொடர்பாக மோடி அரசுக்கு தெளிவான கொள்கை இல்லையா என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காஷ்மீரில் வன்முறையை கட்டுப்படுத்துவதிலும், பாதுகாப்பு அளிப்பதிலும் மோடி அரசு முழு தோல்வி அடைந்திருப்பது நிரூபணமாகி விட்டது. தொடரும் கொலை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன.

பீகார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த நமது சகோதரர்கள் சிலரும் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் தொடர்பாக மோடி அரசுக்கு தெளிவான கொள்கை இல்லையா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.