சிம்லா,
இமாச்சலபிரதேசத்தை சம்பா மாவட்டம் ஹரீர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் விக்சித் ரானா (வயது 19). யூடியூபரான இவர் மல்ஹொடா கிராமத்தை சேர்ந்த பியூஷ் குமார் (வயது 14) என்ற சிறுவனுடன் கடந்த 23ம் தேதி கிராமத்தில் உள்ள பனிப்படர்ந்த மலையில் வீடியோ எடுக்க ஏறியுள்ளார். விகித் ரானா தனது செல்லப்பிராணியான வளர்ப்பு நாயை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
இதனிடையே, மலையேற்றத்தின் திடீரென பனிப்புயல் வீசியுள்ளது. இதில், விக்சிச் ரானாவும் சிறுவன் பியூஷ் குமாரும் சிக்கி உயிரிழந்தனர். மலையேறிய இருவரும் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், மலையேற்ற வீரர்கள், ராணுவத்தினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், 3 நாட்கள் தேடுதலுக்குப்பின் இருவரின் உடல்களும் மலையில் பனிபடர்ந்த வனப்பகுதியில் நேற்று மீட்கப்பட்டது. இதில், விக்சித் ரானாவின் உடல் அருகே அவரது செல்லப்பிராணி நாய் படுத்து கிடந்தவாறு அவரின் உடலை பாதுகாத்துள்ளது.
இதையடுத்து, விக்சித் மற்றும் சிறுவன் பியூசின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விக்சித்தின் செல்லப்பிராணி நாயையும் மீட்டனர். உயிரிழந்த எஜமானரின் உடலை செல்லப்பிராணி நாய் 3 நாட்கள் பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.