தேசிய செய்திகள்

டோக்லாம் போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் அதிகரிக்க கூடும்: பிபின் ராவத்

டோக்லாம் போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் அதிகரிக்க கூடும் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது. இந்தியாவும் இங்கு படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசும்பொழுது, டோக்லாம் பீடபூமி பகுதியில் நிலைமையை கைப்பற்றும் சீனாவின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிரிக்க கூடும் என நான் கருதுகிறேன் என கூறினார்.

இந்த பகுதியினை பற்றிய விவாதம் மற்றும் எல்லையை கைப்பற்றுவதில் உள்ள போட்டி தொடர்ந்து இருக்கும். உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு ஒழுங்குமுறை பற்றிய வேறுபட்ட கருத்துகள் உள்ள நிலையில் இந்த நிலைமையே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை