தேசிய செய்திகள்

டோக்லாம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த வெளியுறவுத்துறைக்கு காங்கிரஸ் எம்.பி. வாழ்த்து

டோக்லாம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த வெளியுறவுத்துறைக்கு காங்கிரஸ் எம்.பி. வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

திருவனந்தபுரம்

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது.

இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் அங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. என்ற போதிலும் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. 73 நாட்கள் நீடித்த இந்த மோதல் போக்கில் நேர்மறையான நகர்வாக சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டு உள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

சீனா - இந்தியாவுக்கு இடையே இருந்த டோக்லாம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த வெளியுறவுத்துறைக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சசிதரூர் கூறியதாவது:-

நான் அதன் இராஜதந்திர வெற்றிக்கு வெளிவிவகார துறை அமைச்கத்துக்கு வாழ்த்துக்களை கூற விரும்புகிறேன், சீனாவை நிலைநிறுத்துவதோடு, நிலைமையை முன்னதாகவே நிலைக்கு மீட்டெடுக்கவும் நான் விரும்புகிறேன். பிரச்சினைக்குரிய சாலை அமைத்து இருந்தால் அது முரண்பாடாக இருந்து இருக்கும்.

அந்த சாலை எப்போதுமே ஒரு சாலையாக இருந்திருக்கும்.அது இந்திய எல்லைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் . சாலையை மீண்டும் கட்டுவதற்கான எந்த முயற்சியும் சீனா எடுக்க தூண்டும் பதிலை இந்தியா அளிக்க கூடாது. சீனர்கள் அதை புரிந்துகொள்வதை உறுதி செய்வது இந்தியாவுக்கு முக்கியம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை