சண்டிகார்,
டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்ததைப் போன்று அரியானாவில் இளம்பெண் ஒருவர் கடத்தி, கும்பலால் கற்பழித்து, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் மூன்று பேரை கைது செய்து உள்ளது.
அரியானாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு, காரை ஏற்றி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவருடைய சடலத்தை பார்த்ததில் இருந்து அவரது தயார் உடைந்து, துயரத்தை சொல்ல முடியாது வேதனையில் தவிக்கிறார். அவருக்கு யாரும் ஆறுதல் கூறமுடியவில்லை. பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் பார்த்த தாய் வேதனையை செல்லமுடியாது வீட்டில் விழுந்த இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் விட்டு அழுது வருகிறார்.
கண்ணீருடன் அவர் பேசும் வார்த்தை, இனி யாரும் பெண் குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள், எனபதே.
யாருடைய மகளுக்கு வேண்டும் என்றாலும் இதுபோன்ற கொடூரம் நிகழும். அரசு பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறது, ஆனால் குண்டர்கள் அவர்களை கொன்று குவித்து வருகிறார்கள். இன்று நான் எதை பார்க்கின்றேனோ, அதனை தவிர்க்க யாரும் பெண் குழந்தையை பெற்றுக் கொள்ளாதீர்கள். குண்டர்கள் அனைவரும் உயிருடன் வாழ்வதால் அனைத்து தாய்மார்களும் அவர்களுடைய பெண் குழந்தைகளை நினைத்து தவித்து வருகிறார்கள்.
குற்றவாளிகளை என் முன்னே கொண்டு வாருங்கள், அவன்களை நானே கொல்லவேண்டும் என கண்ணீர் மல்க பேசிஉள்ளார்.