தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நன்கொடையாக திரட்டப்பட்ட 15 ஆயிரம் காசோலைகள் திரும்பி வந்தன

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.

தினத்தந்தி

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நன்கொடை திரட்டியது. அப்படி திரட்டப்பட்ட 15 ஆயிரம் வங்கி காசோலைகள் திரும்பி வந்து விட்டன.

இவற்றின் முக மதிப்பு ரூ.22 கோடி ஆகும். இதற்கு நன்கொடை அளித்தவர்களின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததும், சில தொழில்நுட்ப தவறுகளுமே காரணம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுவரை, 5,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி தொகை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்