தேசிய செய்திகள்

பா.ஜனதா எம்.எல்.ஏ. பலாத்கார குற்றவாளியென்றால் கேள்வி எழுப்பாதீர்கள் - மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி

பாலியல் பலாத்கார வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றவாளியென்றால் கேள்வி எழுப்பாதீர்கள் என மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தினத்தந்தி

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு சுமத்திய சிறுமி சென்ற கார் மீது நேற்று லாரி மோதிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். இதற்கிடையே எம்.எல்.ஏ. தான் சதி திட்டம் தீட்டி எங்களுடைய குடும்பத்தை அழிக்க பார்க்கிறார் என சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இவ்விவகாரத்தில் பா.ஜனதாவை கடுமையாக தாக்கியுள்ள ராகுல் காந்தி, பாலியல் பலாத்கார வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றவாளியென்றால் கேள்வி எழுப்பாதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற பிரதமர் மோடியின் திட்டத்தை குறிவைத்து ராகுல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பெண் குழந்தைகளை பாதுகாப்போம். இந்திய பெண்களுக்கான ஒரு புதிய சிறப்பு கல்வி திட்டம். ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ. உங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் கேள்விகளை கேட்க வேண்டாம் என்கிறது'' என ராகுல் காந்தி டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது