ஹைதராபாத்
ஜாமியா நிஜாமியாஸ் 1876 இல் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இது நாட்டில் உள்ள பழமையான இஸ்லாமிய கல்லூரிகளில் ஒன்றாகும்.தற்போது அந்த அமைப்பு ஜனவரி 1 ந்தேதி ஒரு பத்வா( ஆணை)வை வெளியிட்டு உள்ளது. அதில் இறால்கள் மற்றும் நண்டுகள் மீன்வகைகளின் கீழ்வரவில்லை அதை சாப்பிட வேண்டாம்.
இந்த ஆணையை ஜாமியா நிஜாமியாவின் தலைமை முப்தி முகமது அஷீமுதீன் வழங்கி உள்ளார்.
இறால் முதுகெலும்பற்ற விலங்கு பூச்சி வகையை சேர்ந்தவையாகும். எனவே இது விலக்கபட்ட உணவுகளில் வருகிறது. இது முஸ்லீம்களுக்கு கண்டிப்பாக அருவருப்பானது என கூறப்பட்டு உள்ளது.