தேசிய செய்திகள்

தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி

தற்போது அமலில் இருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் இனி வரும் காலங்களிலும் தொடரும் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-