தேசிய செய்திகள்

எங்கள் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் - சீனாவுக்கு இந்தியா மீண்டும் குட்டு

காஷ்மீர் விவகாரம்: எங்கள் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவை இந்தியா மீண்டும் தாக்கி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி:

சீனா-பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளின் சந்திப்பின் போது ஜம்மு-காஷ்மீரின் நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு "ஒருதலைப்பட்ச" நடவடிக்கையையும் எதிர்ப்பதாக சீனா பாகிஸ்தானிடம் கூறியது.

இதற்கு ஒருநாள் கழித்து இந்தியா இந்தியா சீனா,பாகிஸ்தான் இரு நாடுகளையும் கண்டித்ததுடன் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தியது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்கமுடியாத பகுதி என்று வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) மீண்டும் கூறியது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:-

கடந்த காலங்களைப் போலவே, சீனா-பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளின் மூலோபாய உரையாடலின் 2 வது சுற்று கூட்டு செய்திக்குறிப்பில் ஜம்மு-காஷ்மீர் பற்றிய குறிப்பை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். ஜம்மு-காஷ்மீர் ஒரு ஒருங்கிணைந்த &இந்தியாவின் மாற்ற முடியாத பகுதி. "

இந்தியாவின் உள் விவகாரங்களில் சயாரும் தலையிடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறி உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை