தேசிய செய்திகள்

நெருக்கமானவர்களின் ஸ்டேடஸ்களை மிஸ் பண்ணாமல் பார்க்கலாம்: வாட்ஸ் அப்பில் வரும் புதிய வசதி

வாட்ஸ் அப்பில் பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.

தினத்தந்தி

வாட்ஸ் அப் செயலியை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் வாட்ஸ் அப்பில் பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. இதன்படி, நமக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் ஸ்டேடஸ் வைத்தால் அதை அலர்ட் செய்யும் வகையில் நோட்டிபிகேஷனை ஆன் செய்து வைக்கலாம். இதன் மூலம் அவர்கள் ஸ்டேடஸ் வைத்தால் உடனே அலர்ட் காட்டும். இதனால், அவர்களின் ஸ்டேடஸ்களை மிஸ் செய்யாமல் பார்க்க முடியும். வாட்ஸ் அப்பை பொறுத்தவரை அனைத்து ஸ்டேடஸ்களையும் சிலர் பார்க்க விரும்புவது இல்லை. வேண்டிய நபர்களின் ஸ்டேடஸ்களை மட்டுமே பார்க்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ் அப்பின் இந்த புது அப்டேட் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்