தேசிய செய்திகள்

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக நீடித்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. உரிமம் பெறாத ஆலைகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கும் பணிகளை அரசு தொடங்கியதால் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், உரிமம் கோரி விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 7 நாட்களாக நீடித்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கேன் குடிநீர் ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேன் குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக குடிநீர் கேன் தண்ணீருக்கு நிலவி வந்த தட்டுப்பாடு பிரச்சினை சரியாகும் எனத்தெரிகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு