தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த டிரோன்... சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப். வீரர்கள்

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது.

பெரோஸ்பூர்:

பஞ்சாப் மாநிலம் பெரேஸ்பூர் மாவட்டத்தின் திண்டிவாலா கிராமம், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.

வயல்வெளியில் விழுந்த டிரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அது சீனாவில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இதேபோல் நேற்று முன்தினம் அமிர்தசரஸ் மாவட்டம் பாரோபால் கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டு கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்