தேசிய செய்திகள்

ஜம்முவில் மீண்டும் ட்ரோன்கள் தென்பட்டதால் உஷார்நிலை அதிகரிப்பு

ஜம்மு எல்லைகளில் ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டதால் உஷார்நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீரில் ஜம்மு நகரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதி, வெடிகுண்டுகளை ஏற்றி வந்த 2 ட்ரோன்கள், அந்த தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு சென்றன. அதில், 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அந்த தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது என்று தெரிய வந்தது. தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜம்முவில் ராணுவ பகுதிகள் அருகே ட்ரோன்கள் நடமாட்டம் அதிகரித்தது.

சில நாட்கள் இந்த நடமாட்டம் நின்றிருந்த நிலையில், மீண்டும் ட்ரோன்கள் நடமாட்டம் காணப்படுகிறது. ஜம்மு விமானப்படை தளம் அருகே சத்வாரி-காலுசக் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு ட்ரோன் பறந்து வந்தது. உரிய நேரத்தில் அதை கவனித்து விட்ட ராணுவ வீரர்கள், அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில ரவுண்டு சுட்டதை தொடர்ந்து, அந்த ட்ரோன் பின்வாங்கி சென்று மறைந்து விட்டது. இதுகுறித்து போலீசாருக்கு ராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்தனர். ஜம்மு நகரில் முழு உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து