தேசிய செய்திகள்

ஏரியில் மூழ்கி தந்தை-மகன் சாவு

ஏரியில் மூழ்கி தந்தை-மகன் பலியானார்கள்.

தினத்தந்தி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வார் தாலுகா காரேகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் கடிகொப்பா அங்கடி (வயது 35). இவரது மகன் ரவி அங்கடி (14). லாரி டிரைவரான கடிகொப்பா, நேற்று அந்தப்பகுதியில் உள்ள ஏரியில் லாரியை கழுவ சென்றுள்ளார். அப்போது அவருடன் ரவியும் சென்றுள்ளான். அவர்கள் ஏரியில் லாரியை கழுவிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ரவி, ஏரி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடிகொப்பா, ரவியை காப்பாற்ற முயன்றுள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் 2 பேரும் ஏரி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது