தேசிய செய்திகள்

போதை பொருள்-பயங்கரவாத வழக்கு; 10 குற்றவாளிகள் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்புடைய போதை பொருள்-பயங்கரவாத வழக்கில் 10 குற்றவாளிகள் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கவும், கட்டமைக்கவும் தேவையான நிதியை திரட்டுவதற்கு பாகிஸ்தானை சேர்ந்த சில பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம் தீட்டி வருகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை காஷ்மீர் போலீஸ் அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக போதை பொருளை உபயோகித்தல், ஆயுதங்களை கடத்துதல் உள்ளிட்ட செயல்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் உயர்மட்ட தளபதிகள், அவர்களது கூட்டாளிகள் மற்றும் பயங்கரவாத கும்பல்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாத கட்டமைப்பினை மேம்படுத்தவும் மற்றும் அதற்கு ஆதரவளிக்கவும் சதி திட்டம் தீட்டியது.

இதற்காக போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட விசயங்களில் அந்த அமைப்பு ஈடுபட்டு நிதி திரட்டியுள்ளது. இதனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் கண்டறிந்துள்ளனர். இது தொடர்புடைய வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் இதுவரை அவர்களிடம் இருந்து ரூ.98.5 லட்சம் பணம், 8 வாகனங்கள் மற்றும் 3 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதற்காக பணமுதலீடும் செய்யப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்