தேசிய செய்திகள்

கோவா கப்பலில் போதை விருந்து வழக்கு; மும்பையின் 3 இடங்களில் அதிரடி சோதனை

கோவா கப்பலில் போதை விருந்து வழக்கில் மும்பையின் 3 இடங்களில் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதை பொருள் பயன்படுத்துவதாக, போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு கப்பலில் சாதாரண பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.

இந்த வழக்கில் அர்பாஸ் சேத் மெர்சன்ட் மற்றும் மாடல் அழகி முன்முன் தமீச்சா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, மும்பை பந்திரா பகுதியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் சோதனைகள் நடத்தி உள்ளன.

வழக்கில், நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில், மும்பையின் அந்தேரி மற்றும் ஜுகு உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை முதல் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது