தேசிய செய்திகள்

போதைப்பொருள் கொடுத்து பேராசிரியை பாலியல் பலாத்காரம் - 2 வாலிபர்கள் வெறிச்செயல்

போதைப்பொருள் கொடுத்து பேராசிரியை 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (வயது 28). இவரது நண்பர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மார்டின் ஆண்டனி (27). இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரி பேராசிரியை அறிமுகம் ஆனார்.

இந்தநிலையில் பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய 2 பேரும் பேராசிரியையை கடந்த 13-ந் தேதி கொச்சிக்கு வரவழைத்து, எம்.டி.எம்.ஏ. என்ற உயர்ரக போதைப்பொருள், கஞ்சா ஆகியவற்றை வலுக்கட்டாயமாக கொடுத்து உள்ளதாக தெரிகிறது. பின்னர் அவர் மயக்கம் அடைந்தார். அந்த நிலையில் பேராசிரியையை களமச்சேரி, நெடும்பாசேரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியை களமச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் அறிமுகமான பேராசிரியையை கொச்சிக்கு வரவழைத்து, போதைப்பொருள் கொடுத்து பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய 2 பேர் மயங்க வைத்து உள்ளனர்.

பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பேராசிரியை மருத்துவ பரிசோதனைக்காக களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்