தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டை சேர்ந்த 2 பெண்களை கைது அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஜோகன்ஸ்பெர்க்கில் இருந்து தோகா வழியாக மும்பை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 வெளிநாட்டு பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் உடைமைகளை பிரித்து சோதனை நடத்தினர்.

இதில், அவர்கள் உடைமையில் 5 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.25 கோடி ஆகும். இதையடுத்து போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டை சேர்ந்த 2 பெண்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு