தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ரூ.55 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்; 4 பேர் கைது

மேற்கு வங்காளத்தில் மேற்கு துறைமுக பகுதியில் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அதிக அளவில் மாத்திரைகள் இருந்தன.

தினத்தந்தி

அவை யபா என்று அழைக்கப்படும் ஆம்பெடமைன் போதை மாத்திரைகள் என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2.29 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர் என்றும் மற்றொருவர் மணிப்பூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் விற்பனையில் அவர்களுடன் தொடர்புடைய மற்ற 2 விற்பனையாளர்கள் பற்றி போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, சனிக்கிழமை இரவு மால்டா மாவட்டம் கசோல் பகுதியில் மேலும் 2 போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள 10.06 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து