தேசிய செய்திகள்

ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு

கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கார்களில் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள், ஏர்-பேக்-ஐ பொருத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவால் கார்கள் விலை சற்று உயரலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓட்டுநர் இருக்கைகளில் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது, முன் பக்கம் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்