தேசிய செய்திகள்

வீடுகள் விலை மலிவுக்கு காரணம், பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான் பிரதமர் மோடி பெருமிதம்

வீடுகள் விலை மலிய காரணம், பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

தினத்தந்தி

சூரத்,

பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை தடை செய்து கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தார். அந்த நடவடிக்கை இன்றுவரை பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குஜராத் மாநிலம், சூரத் நகர விமான நிலையத்தில் கூடுதல் முனையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, விழாவில் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். அப்போது அவர் பணமதிப்புநீக்க நடவடிக்கை பற்றி கூறியதாவது:-

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் என்ன பலன் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்வியை நீங்கள் இளைய தலைமுறையினரிடம் கேளுங்கள்.

வீடுகள் விலை மலிவு

அவர்களால்தான் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் மலிவு விலையில் வீடுகள் வாங்க முடிந்தது.

கருப்பு பணத்தை குவித்தவர்கள் எல்லோரும் ரியல் எஸ்டேட் துறையில்தான் முதலீடு செய்தனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டமும்தான் அதற்கு கடிவாளம் போட்டன.

சிவில் விமான போக்குவரத்து

சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் பிராந்தியங்களுக்கு இடையே விமான போக்குவரத்து நடத்தும் திட்டம் நல்லதொரு திட்டம் ஆகும். இதன் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் விமான பயணங்கள் மேற்கொள்வதற்கு வழி பிறந்துள்ளது.

இது, நாட்டின் சிவில் விமான போக்குவரத்து துறை வளர்ச்சிக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

4 ஆண்டு சாதனை

கடந்த 4 ஆண்டு கால மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் எங்கள் அரசு 1 கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டி உள்ளன. ஆனால் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 25 லட்சம் வீடுகள்தான் கட்டப்பட்டன. கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் தொங்கு நாடாளுமன்றம்தான் அமைந்தது. இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதித்தது.

4 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தனிப்பெரும்பான்மையான ஆட்சிக்கு வாக்களித்தனர். அதனால் நாடு அதிவேக முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

நாங்கள் 4 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனையை முந்தைய ஆட்சியாளர்கள் செய்வதற்கு இன்னும் 25 ஆண்டுகள் தேவைப்படும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்