தேசிய செய்திகள்

சிவமொக்காவில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது; 4 பேர் படுகாயம்

சிவமொக்காவில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைத்து உள்ளனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா பெல்லூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட காமனத்தேவ் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். விவசாயி. இவரது மனைவி வேதவதி. இவர்களுக்கு தேஜஸ், ஹர்ஷவாதன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பெல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதில் லோகேசின் வீட்டிற்குள் வெள்ளநீ புகுந்தது. இதனால் வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் லோகேஷ் உள்பட குடும்பத்தினர் சிக்கி கொண்டனர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியினர் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிகிக்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து பெல்லூர் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்