தேசிய செய்திகள்

துர்கா பூஜையையொட்டி ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

துர்கா பூஜையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

அந்தவகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், சக குடிமக்களுக்கு துர்கா பூஜை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீமையை நன்மை வெற்றி கொண்டதை கொண்டாடுகிறோம். இந்த நேரத்தில் பெண்ணினத்தை மதிக்க உறுதியேற்போம். துர்கை அம்மன் நமது வாழ்வை மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தால் நிரப்பட்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, துர்கா பூஜை தினத்தில் நம்மை எல்லாம் தனது சிறந்த ஆசீர்வாதங்களால் துர்கை அம்மன் நிரப்பட்டும். பண்டிகையை கொண்டாடும் இந்த நேரத்தில், சமூகத்தில் இருக்கும் தீமையை போக்கி, சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக மாற்ற உறுதியேற்போம் என்று வாழ்த்தியுள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் மகா அஷ்டமி சிறப்பு தின வாழ்த்துகள். நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த உடல் நலம், வளம் தொடர்வதற்காக துர்கை அம்மனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்