தேசிய செய்திகள்

டெல்லியில் புழுதி புயல்: போராடும் விவசாயிகளின் கூடாரங்கள் சேதம்

டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல் மற்றும் மழையால் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் கூடாரங்கள் சேதமடைந்து உள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் 26ந்தேதி பேரணியாக டெல்லிக்கு புறப்பட்டனர்.

கனமழை, கடும் குளிர், வெயில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 6 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநில எல்லையான காசிப்பூர் பகுதியில் கூடாரங்கள் அமைத்துள்ளனர்.

அவர்கள் அங்கேயே தங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நேற்றிரவு திடீரென பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்ய தொடங்கியது. அதனுடன், புழுதி புயலும் வீச தொடங்கியது.

சிறிது நேரத்தில் வேகமெடுத்த புழுதி புயலால், விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அவர்கள் வைத்திருந்த பேனர்கள் சரிந்தன. சிலரது கூடாரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால், தூங்குவதற்கு வழியின்றி இரவில் அவர்கள் தவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்