தேசிய செய்திகள்

13-வது சட்ட திருத்தம் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு - ஜெய்சங்கர் நம்பிக்கை

13-வது சட்ட திருத்தம் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இந்தியா-இலங்கை நாடாளுமன்ற நட்புறவு அமைப்பின் நிகழ்வு ஒன்றில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அதில் அவர் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ஒன்றுபட்ட மற்றும் வளமான இலங்கையின் கட்டமைப்புக்குள் சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதைக்கான தமிழ் சமூகத்தின் விருப்பங்களை நிவர்த்தி செய்யும் ஒரு நல்லிணக்க செயல்முறை உருவாகும். 13-வது சட்ட திருத்தத்தின்படி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துதல் ஆகியவை இந்த நோக்கத்திற்கு உதவும்' என கூறினார்.

இலங்கையின் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றுக்கு இந்தியா அளித்து வரும் நேர்மறையான பங்களிப்புகளை பட்டியலிட்ட ஜெய்சங்கர், இலங்கையின் பல இன, பல மொழி மற்றும் பல மத அடையாளத்தை பாதுகாப்பதற்கு இந்தியா உதவும் எனவும் உறுதியளித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்