தேசிய செய்திகள்

அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு

அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

போர்ட்பிளேர்,

அந்தமான் மற்றும் நிகோபர் தீவின் கேம்ப்பெல் பே பகுதியில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் பாதுகாப்பான பகுதிக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.