புதுடெல்லி,
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் , பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.