தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மிக அதிகமாக ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் இன்று மதியம் 2.06, 3.53, 4.57 மணி அளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முறையே 4.1, 3.6 மற்றும் 3.5 என்ற அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்