கேங்டாக்,
சிக்கிமில் நம்சி பகுதியில் இன்று அதிகாலை 3.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மர், வங்காளதேசம் மற்றும் திபெத் நாடுகளில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொல்கத்தாவிலும் உணரப்பட்டது.